சல்மான் கானின் ராதே படத்தில் தனது கதாபாத்திரம் தொடர்பாக பரவி வந்த வதந்திக்கு நடிகர் பரத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சல்மான் கானுக்கு நான் வில்லனா?- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்
பதிவு: நவம்பர் 13, 2019 18:11
பரத், சல்மான் கான்
நடிகர் பிரபுதேவா தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கானை வைத்து ராதே என்ற ஹிந்தி படத்தினை இயக்குகிறார். அந்த படத்தில் தமிழ் நடிகர் பரத் நடிக்கிறார் என சமீபத்தில் அறிவிப்பு வந்தது. அதை உறுதி செய்யும் விதத்தில், ராதே படப்பிடிப்பு தளத்தில் சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படத்தை பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
பரத் தான் இந்த படத்தில் வில்லன் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மைஇல்லை என கூறியுள்ளார். “அந்த படத்தில் வில்லனாக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். நான் போலீசாக நடிக்கிறேன். அது சல்மான் சார் அருகில் பயணிக்கும் கதாபாத்திரம்” என்று கூறியுள்ளார். ராதே படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2020 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராதே திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
Related Tags :