இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து அமலாபால் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் படத்தில் இருந்து அமலாபால் நீக்கம்?
பதிவு: நவம்பர் 13, 2019 16:35
மணிரத்னம், அமலாபால்
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அமலாபாலுக்கு மைனா, பசங்க, வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் ஆகியவை முக்கிய படங்களாக அமைந்தன. ‘ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அவரது துணிச்சலுக்கு சிலர் பாராட்டும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க அமலாபாலை தேர்வு செய்து இருந்தனர். கதாபாத்திரத்துக்கான தோற்றத்துக்கு அவருக்கு மேக்கப் போட்டு பார்த்தபோது மணிரத்னத்துக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து அமலாபாலை நீக்கி விட்டதாக தகவல் பரவி உள்ளது.
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததையும் நீக்கத்துக்கு காரணமாக சொல்கின்றனர். பொன்னியின் செல்வன் சரித்திர கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அமலாபாலுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அமலாபாலை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
ஆனால் கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்தும் நீக்கி விட்டனர். தயாரிப்பு நிறுவனத்தின் சில நிபந்தனைகளுக்கு உடன்படாததால் அவரை நீக்கியதாக கூறப்பட்டது. அமலாபாலோ தயாரிப்பாளரின் ஆணாதிக்க மனப்பான்மையால், தான் வெளியேற்றப்பட்டதாக அறிக்கை வெளியிட்டார். நிர்வாணமாக நடித்ததே படங்களில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று பேசுகின்றனர்.
Related Tags :