சினிமா
விஜய்

தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்

Published On 2019-11-12 11:48 GMT   |   Update On 2019-11-12 11:48 GMT
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது  விறுவிறுப்பாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. 

டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்து வைரலாகியுள்ளது. அதில் விஜய் கழுத்தில் ஐடி கார்டு அணிந்து கொண்டு கல்லூரி மாணவர் போல இருக்கிறார். 



இதைப்பார்த்த ரசிகர்கள் கல்லூரி மாணவராக விஜய் நடிப்பதாக கூறிவருகின்றனர். ஒரு சிலர் ஆசிரியர் வேடத்தில் நடிப்பதாக கூறுகிறார்கள்.
Tags:    

Similar News