சினிமா
ஐகோர்ட்டு

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Published On 2019-11-08 12:32 GMT   |   Update On 2019-11-08 12:32 GMT
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிவடைந்து விட்டாலும், வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தனி அதிகாரியாக பத்திரப்பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா என்பவரை தமிழக அரசு நேற்று நியமித்தது. 

இதையடுத்து நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் கார்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி அதிகாரி நியமிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அதில், நடிகர் சங்க நிர்வாக பணிகளை கவனிக்க எந்த குழுவும் இல்லாததால் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை அல்லது ஓராண்டு வரை தனி அதிகாரியை நியமித்திருக்கிறோம் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை அரசு நியமித்ததற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News