ஜெய், அறிமுக நாயகி பானு நடிப்பில் அண்ட்ரோ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு சென்ற பிரேக்கிங் நியூஸ்
பதிவு: நவம்பர் 06, 2019 12:09
பிரேக்கிங் நியூஸ் படத்தில் ஜெய்
ஜிகுனா படத்தை தயாரித்தவர் திருக்கடல் உதயம். இவர் தனது மூன்றாவது தயாரிப்பான ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் இருந்து பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட்டு செய்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‘ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷ்ன் படம், மிக பிரமாண்டமாக பொருள் செலவில் தயாராகிறது, இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம். மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் பாதி படத்திற்கு மேல் கிரீன் மற்றும் புளூ மேட்டிலேயே படமாக்கி வருகிறோம், காதல், எமோஷன், சென்டிமென்டுடன் கலந்த கமர்சியல் படமாக தயாராகிறது’ என்றார்.
ஜெய், அறிமுக நாயகி பானு, சுறா படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ், இருவரும் இந்த படத்தில் வில்லன்களாக வருகிறார்கள், ஜெ பிரகாஷ், இந்தரஜா, சந்தானா பாரதி, மோகன் ராம், பழ கருப்பையா, பி.எல்.தேனப்பன், மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Related Tags :