சினிமா
விஷால்

இனி இப்படி நடக்க விட கூடாது - விஷால்

Published On 2019-10-29 13:42 IST   |   Update On 2019-10-29 13:42:00 IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் மறைவிற்கு, இனி இப்படி நடக்க விட கூடாது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித், இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்த‌தாக அறிவித்தார்கள். சுஜித் இழப்புக்கு பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.



நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ‘அப்பாவியான குழந்தை சுஜித்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஆழ்துளை கிணறுகளை மூடாமல் இருப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Similar News