சினிமா
ஜிவி பிரகாஷ்

நினைச்சதைவிட அதிக ரெஸ்பான்ஸ் - ஜி.வி.பிரகாஷ்

Published On 2019-10-25 11:40 GMT   |   Update On 2019-10-25 11:40 GMT
பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜிவி பிரகாஷ், நினைச்சதைவிட அதிக ரெஸ்பான்ஸ் என்று கூறியிருக்கிறார்.
இசையமைப்பாளராகத் தன்னை நிரூபித்த ஜி.வி.பிரகாஷ் குமார், ஒரு நடிகராக தனக்கான இடத்தைப் பிடிப்பதில் முனைப்போடு இருக்கிறார். ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தாலும், `அசுரன்', `சூரரைப் போற்று' மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- "இசையிலும், நடிப்பிலும் எனக்கு தனி மார்க்கெட் உருவாக்கிக்கணும்னு நினைக்கிறேன். இந்த படம் பண்றேன், அந்த படம் பண்றேன்னு நானே கேட்கமாட்டேன். இந்த வருடம் நான் இசையமைச்ச படங்கள்ல 'அசுரன்' வெளியாச்சு. நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. என்டர்டெயின் பண்ற படங்கள்ல நடிக்கணும்னுதான் முடிவு பண்ணி வெச்சிருந்தேன். 



ஆனா, 'நாச்சியார்' படத்துல என் டிராக்கை மாத்திவிட்டார், பாலா சார். அந்தளவுக்கு என்னால நடிக்க முடியுமானு யோசிச்சேன். பாலா சார்தான் நம்பிக்கை கொடுத்தார். அப்புறம் 'சர்வம் தாளமயம்' படத்துல ராஜீவ் சார் இன்னும் என்னை மெருகேற்றினார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தைப் பொறுத்தவரை நல்ல கமர்ஷியல் படம்; சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகும்னு நினைச்சேன். 

ஆனா, நல்லா நடிச்சிருக்கேன்னு கமென்ட்ஸ் வந்தது. நினைச்சதைவிட அதிக ரெஸ்பான்ஸ் கிடைச்சது ரொம்ப சந்தோஷம். இருந்தாலும், நான் அதிகம் எதிர்பார்க்கிறது வசந்த பாலன் சாருடைய 'ஜெயில்'. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இருக்கவேண்டிய இடத்துக்குப் போவார். முக்கியமான அரசியலைப் பேசியிருக்கார். படம் நிச்சயம் பேசப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News