சினிமா
சாய்

நீட் தேர்வு பற்றி படம் இயக்கிய மருத்துவர்

Published On 2019-10-20 06:05 GMT   |   Update On 2019-10-20 06:05 GMT
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது, இதனை மருத்துவர் ஒருவர் இயக்கியுள்ளார்.
சாய் என்ற இளைஞர் இயக்கியுள்ள படம் இபிகோ 306. இந்திய தண்டனை சட்ட பிரிவில் இது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்தை குறிக்கும். படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதுடன் முக்கிய எதிர்மறை வேடத்திலும் நடித்துள்ள சாய் படம் பற்றி கூறியதாவது:- சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம். 

மருத்துவ சீட் கிடைத்ததால் படித்தேன். கடந்த பிப்ரவரியில் எம்பிபிஎஸ் முடித்தேன். பள்ளி, கல்லூரியில் இயக்கிய குறும்படங்கள் கொடுத்த அனுபவத்தால் இயக்கி உள்ளேன். கல்வியில் நிலவும் வியாபாரம் மற்றும் அரசியல் பற்றி பேசும் படம் இது. ஒரு கிராமத்து ஏழை மாணவியின் படிப்பு கனவுக்கு நீட் நுழைவுத்தேர்வு எப்படி தடையாக இருக்கிறது என்பதையும் நீட்டுக்கு பின்னணியில் இருக்கும் வியாபார தந்திரங்களையும் சொல்லும் கதை. 



நீட் தேர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை பேசும்.  சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன், கணேஷ், ரிஷி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சாய் பிக்சர்ஸ் சார்பில் பி.சிவகுமார் தயாரித்துள்ளார். சூர்ய பிரசாத் இசையமைக்க ஜோ.சுரேஷ், செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 21 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். 
Tags:    

Similar News