சினிமா
நரேன்

கைதி கமர்ஷியல் படம் தான், ஆனா வித்தியாசமா புதுசா இருக்கும் - நரேன்

Published On 2019-10-19 07:05 GMT   |   Update On 2019-10-19 07:05 GMT
‘கைதி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேன், இந்த படம் கமர்ஷியல் தான். ஆனா வித்தியாசமா புதுசா இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் நரேன், கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கைதி படம் குறித்து நரேன் கூறும்போது, ‘இந்த படத்தில் நான் போலீஸ். ஸ்பெஷல் ஸ்டாஸ்க் போர்ஸ். கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேர சொன்னவுடனே, கார்த்தி நான் போன் பண்றேன்னு சொல்லி கூப்பிட்டிருக்கார். அஞ்சாதே படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருக்கும்னு நான் பண்ணல. இதுல எப்படினு கேட்டேன். நல்ல கேரக்டர்னு சொன்னார். நீங்க பண்றீங்களானு கேட்டேன் ஆமானு சொன்னார். உடனே நான் ஒத்துக்கிட்டேன். 



டைரக்டர் லோகேஷோட மாநகரம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. லோகேஷ் கைதி கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிந்தது கண்டிப்பா படம் சூப்பரா இருக்கும் என்று. லோகேஷ், கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு ஷாட்டையும் புதுசா முயற்சி பண்ணி எடுத்திருக்காங்க. இப்படிபட்ட டீம்ல இருந்தது சந்தோஷம். 

இந்த தீபாவளி கொண்டாட்டமா இருக்கும். கைதி கமர்ஷியல் படம் தான். ஆனா வித்தியாசமா இருக்கும் புதுசா இருக்கும். பிகில், கைதி ரெண்டும் பாருங்க கண்டிப்பாக பிடிக்கும்’ என்றார். 
Tags:    

Similar News