தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இவரா?
பதிவு: அக்டோபர் 13, 2019 17:18
ரஜினி 168
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த புதிய படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :