ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் சம்பவம் படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்க உள்ளனர்.
டான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்
பதிவு: அக்டோபர் 12, 2019 17:03
தினேஷ், ஸ்ரீகாந்த்
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனர் தினேஷ், மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்க உள்ளனர்.
நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.
Related Tags :