சினிமா
டேனியல் பாலாஜி

மாணவர்கள் படிப்பை கைவிட கூடாது - டேனியல் பாலாஜி

Published On 2019-08-16 04:29 GMT   |   Update On 2019-08-16 04:29 GMT
மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பாக நடந்த இந்திய சுதந்திர தின விழாவில, மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது என்று டேனியல் பாலாஜி கூறியுள்ளார்.
மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பாக இந்திய சுதந்திர தின விழா சென்னை எம்.எம்.டி.ஏ-வில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், அரசின் பல்வேறு துறைகளில் சிறந்து முறையில் பணியாற்றுபவர்களுக்கு ‘உழைப்பால் உயர்ந்தவர் விருது’ ஆகியவை வழங்கப்பட்டது.



அதன்பின் பேசிய திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ், ‘மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.



டேனியல் பாலாஜி பேசும்போது, ‘மாணவர்கள் படிப்பை கைவிட கூடாது. பள்ளி அளவில் இல்லாமல் கல்லூரி அளவில் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். நான் நன்றாக படித்து விட்டுதான் நடிகராக வந்தேன். சிறப்பாக படித்தால் சிறந்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்' என்றார்.
Tags:    

Similar News