சினிமா
துப்பாக்கியுடன் அஜித்

வீடியோ: நிஜ வாழ்விலும் பில்லாவாக மாறிய அஜித்

Published On 2019-07-31 13:07 IST   |   Update On 2019-07-31 13:07:00 IST
தமிழ் திரையுலகின் அல்டிமேட் ஸ்டாரான அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியில் கலந்துக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை:

தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தாலும், கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு மற்றும் சமையல் என பல்வேறு துறைகளில் அஜித் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் அஜித் இணைந்து பணியாற்றிய தக்‌ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த யூஏஈ மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.

இதையடுத்து சமீப காலமாக அஜித் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் 2019ம் ஆண்டுக்கான மாநில துப்பாக்கி சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதன்படியே அஜித் சென்னை ரைபில் கிளப்  சார்பில் 25 மீட்டர் பிரிவில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொண்டார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.   

Similar News