சினிமா
தீபிகா படுகோனே

அந்த இயக்குனர் படத்தில் நடிக்க கூடாது - தீபிகா படுகோனேவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு

Published On 2019-07-24 13:39 IST   |   Update On 2019-07-24 13:39:00 IST
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனேவிற்கு அவரது ரசிகர்கள் லுவ் ராஜன் இயக்கத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடித்த தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட அவர், தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

மும்பையில் இந்தி இயக்குனர் லுவ் ராஜன் பட கம்பெனி வாசலில் தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் இருவரும் சமீபத்தில் தென்பட்டனர். அந்த படம் இணையத்தில் வெளியானது. அதை பார்த்தவுடன் தீபிகா ரசிகர்கள் பரபரப்பானார்கள்.

உடனே இது எங்கள் தீபிகா இல்லை என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி லுவ் ராஜன் படத்தில் தீபிகா படுகோனே நடிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லுவ் ராஜன் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்தவர் என அவர் மீது ‘மீடூ’ புகார்கள் உள்ளன.



‘மீடூ’ இயக்கத்துக்கு ஆதரவானவர் தீபிகா படுகோனே. பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும்போது அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்.

அப்படிப்பட்ட தீபிகா ஏற்கனவே ‘மீடூ’ புகாரில் சிக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி எதிர்ப்புகளை பகிர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று தீபிகா படுகோனே, இயக்குனர் படத்தில் நடிக்காமல் விலகுவாரா? அல்லது ரசிகர்கள் எதிர்ப்பை மீறி நடிப்பாரா என்பதுபற்றி இதுவரை தீபிகா தரப்பில் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

Similar News