சினிமா
சமந்தா

குடிநீர் பிரச்சினையை தீர்க்க சமந்தா சொல்லும் யோசனை

Published On 2019-07-23 06:27 GMT   |   Update On 2019-07-23 06:27 GMT
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, குடிநீர் பிரச்சனையை தீர்க்க யோசனை ஒன்றை சொல்லியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், சமந்தா. சென்னை பெண்ணான இவர் திருமணத்துக்குப்பின், ஐதராபாத்தில் குடியேறிவிட்டார். தற்போது சென்னை, ஐதராபாத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க சமந்தா யோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

“குடிநீர் பிரச்சினையில் சென்னை மாநகரம் அல்லாடுகிறது. மக்கள் தண்ணீருக்காக வேலைக்கு செல்லாமல் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். மழை இல்லாததால், நீர் தேக்கங்கள் காய்ந்து கிடக்கின்றன. நிறைய இடங்களில் இந்த நிலைமை இருக்கிறது. ஐதராபாத்திலும் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது நமது கையில் இருக்கிறது. தண்ணீரை வீணாக்காமல் இருந்தால் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்கலாம்.



வெறும் வார்த்தைகளால் மட்டும் இதை சொல்லவில்லை. எனது ரசிகர்களுக்கு ஒரு சவாலை விடுக்கிறேன். அதை நானும் கடைபிடிக்கப் போகிறேன். 

மாநிலங்கள் மட்டுமல்ல, இந்த நாடு முழுவதுமே எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஒரு பக்கெட் சவாலை ஏற்க வேண்டும். ஒரே பக்கெட் தண்ணீரோடு காலை கடன்கள் அனைத்தையும் முடிக்கப் போகிறேன். தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறேன். எல்லோரும் இதை கடைபிடிக்க வேண்டும். ஒரு பக்கெட் தண்ணீரை எப்படி பயன்படுத்தினீர்கள்? என்பதை சமூக வலைத்தளத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” 

இவ்வாறு சமந்தா கூறினார்.
Tags:    

Similar News