அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன், இன்று காலமானார்.
பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்
பதிவு: ஜூலை 12, 2019 15:51
தந்தையுடன் பா ரஞ்சித்
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன், இன்று அதிகாலை காலமானார்.
63 வயதான இவர் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலுக்கு நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கலரப்பாக்கத்தில், இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
Related Tags :