ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பக்ரீத் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பதிவு: ஜூலை 04, 2019 12:16
பக்ரீத் படத்தில் விக்ராந்த், வசுந்தரா
விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.
ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Related Tags :