சினிமா
வடிவேலு

மனிதர்களிடம் உதவும் குணம் குறைந்து வருகிறது - வடிவேலு வேதனை

Published On 2019-07-03 10:32 GMT   |   Update On 2019-07-03 10:32 GMT
மற்றவர்களுக்கு உதவும் குணம் மக்களிடம் குறைந்து வருவதாக நடிகர் வடிவேலு, சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட விழாவில் வேதனையாக தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூரில் அதிகமுடைய அய்யனார் கோவில் உள்ளது. இங்கு மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. 5 புரவிகளை கிராம மக்கள் ஊர்வலமாக சுமந்து வந்து அய்யனார் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

விழாவில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்ற அவர், வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், தண்ணீர் பிரச்சினை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும்.

கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.



இன்றைய உலகில் மற்றவர்களுக்கு உதவும் குணம் மனிதர்களிடம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் ஓரிடத்திற்கு வந்தால் தங்க வைத்து தண்ணீர் தருவார்கள். இன்று தனியாக இருந்தால் கழுத்தை அறுத்து விடுகின்றனர்.

சாலையில் மயங்கி கிடப்பவனுக்கு தண்ணீர் கொடுத்து அனுப்புவார்கள். தற்போது அவனது உடமைகள் பறிபோய் விடுகிறது என வேதனை தெரிவித்தார்.
Tags:    

Similar News