சினிமா
ராதிகா ஆப்தே

பீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் - ராதிகா ஆப்தே வருத்தம்

Published On 2019-06-29 15:08 IST   |   Update On 2019-06-29 15:08:00 IST
பீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்று நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிக்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை ராதிகா ஆப்தே பகிர்ந்தபோது, அதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன். 



என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார். படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்.”

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Similar News