சினிமா

நட்சத்திர ஓட்டலில் ரகளை - டார்லிங் 2 பட இயக்குநர் மீது வழக்குப்பதிவு

Published On 2019-05-06 10:08 IST   |   Update On 2019-05-06 10:08:00 IST
சென்னை நட்சத்திர ஓட்டலில் நடனமாடும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதாக டார்லிங் 2 பட இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #SathishChandrasekaran
சென்னை அண்ணா சாலையில் பார் வசதியுடன் பிரபல நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலுக்கு ‘டார்லிங் 2’ படத்தை இயக்கிய சினிமா இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்தார். 

அப்போது அவர், மதுபோதையில் அந்த நட்சத்திர ஓட்டலில் நடனமாடும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் மீது அந்த பெண் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



இந்த ஓட்டலில் மதுபோதையில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த ஓட்டலில் இரவு 2 மணிக்கு மேல் பார் இயங்கக் கூடாது என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். #SathishChandrasekaran

Similar News