சினிமா

குண்டு படத்தில் இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இருக்கிறது - தினேஷ்

Published On 2019-05-02 16:47 IST   |   Update On 2019-05-02 16:47:00 IST
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இருக்கிறது என்று நடிகர் தினேஷ் கூறியிருக்கிறார். #Dinesh #IrandaamUlagporinKadaisiGundu
‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார்.

இப்படத்தை அடுத்து குக்கூ, விசாரணை, திருடன் போலீஸ், அண்ணனுக்கு ஜே என பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த வரிசையில் தற்பொழுது இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.



இப்படம் குறித்து தினேஷ் கூறும்போது, ‘குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. அதே சமயம் ஜனரஞ்சகமான அனைவரும் ரசிக்கும்படியும், குடும்பங்கள், இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். லாரி ஓட்டுனராக வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்.

அடுத்தடுத்து தமிழகம் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிற மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.

Similar News