சினிமா
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
‘வாண்டட்’ படத்தை தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் உருவாகும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபு தேவா இயக்கவிருக்கிறார். #Dabangg3 #SalmaanKhan #Prabhudeva
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபுதேவா இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார். தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். போக்கிரி படத்தை இந்தியில் சல்மான் கான் நடிக்க ‘வாண்டட்’ என்ற பெயரில் இயக்கியிருந்தார். இந்த படம் வசூல் குவித்தது.
தொடர்ந்து அக்ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், அஜய்தேவ்கன் நடித்த ‘ஆக்ஷன் ஜாக்சன்’ மற்றும் ராமையா வாஸ்தாவையா, ஆர்.ராஜ்குமார், சிங் இஸ் பிளிங் ஆகிய படங்களை இயக்கி இந்தி பட உலகிலும் முன்னணி இயக்குனராக இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.
இந்தியில் வெளியாகி பரபரப்பாக ஓடிய தபாங் படத்தின் மூன்றாம் பாகமாக இது தயாராகிறது. இதன் முதல் பாகம் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாம் பாகத்தை அர்பாஸ்கான் இயக்கினார். தபாங் 3-ஆம் பாகத்தை பிரபுதேவா இயக்குகிறார்.
Day1.... #dabangg3@arbaazSkhan@PDdancing@Nikhil_Dwivedipic.twitter.com/dCEbIQmaqn
— Salman Khan (@BeingSalmanKhan) April 1, 2019
இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கி உள்ளது. இதனை சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். சல்மான் கான் ஜோடியாக சோனாக்சி சின்ஹா நடிக்கிறார்.
பிரபுதேவா நடிப்பில் தேவி-2 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதுதவிர யங் மங் சங், பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். #Dabangg3 #SalmaanKhan #Prabhudeva