சினிமா
தியேட்டர்ல ஓட்டு போட ரெடியா இருங்க - ஆர்.கே.நகர் ரிலீஸ் தேதியை அறிவித்த வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆர்.கே.நகர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #RKNagar #Vaibhav
இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரவிருப்பதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தோஷமான தருணத்துல என்ன சொல்ல வர்ரேன்னா!! #ஆர்கேநகர் படம் வர 12 ஆம் தேதி ஏப்ரல் வெளிவருது! தியேட்டர்ல ஓட்டு போட ரெடியா இருங்க!!🙏🏼 #Rknagar@badri_kasturi@blacktktcompany@saravanarajan5@actor_vaibhav@Premgiamaren@Cinemainmygenes@subbu6panchu@vasukibhaskar@Muzik247inpic.twitter.com/FJawR7nqNM
— venkat prabhu (@vp_offl) March 31, 2019
பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும், விதேஷ் கலை பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #RKNagar #Vaibhav #SanaAlthaf