சினிமா

கதிர் நடிக்கும் ஜடா படக்குழுவின் முக்கிய தகவல்

Published On 2019-04-01 16:51 IST   |   Update On 2019-04-01 16:51:00 IST
அறிமுக இயக்குநர் குமரன் இயக்க கதிர் நாயகனாக நடிக்கும் ஜடா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Jada #Kathir
பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு படங்களை தொடர்ந்து கதிர் தற்போது ஜடா, விஜய்யுடன் இணைந்து தளபதி 63 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஜடா படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்குகிறார். இதில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். ரோஷினி நாயகியாகவும், சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.



தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியிருக்கிறது. நடிகர் கதிர் தனது காட்சிகளுக்கான டப்பிங்கிற்காக பணியாற்றி வருகிறார்.

பொயட் ஸ்டுடியோ மற்றும் சனா ஸ்டுடியோ இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். படத்தின் டிரைலர் மற்றும் இசை விரைவில்  வெளியாக இருக்கிறது. #Jada #Kathir

Similar News