சினிமா

பிலிம்பேர் விருது - ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு விருது

Published On 2019-03-24 09:50 GMT   |   Update On 2019-03-24 09:50 GMT
64-வது பிலிம்பேர் விருது விழாவில் ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகர், நடிகைகான விருது வழங்கப்பட்டுள்ளது. #FilmfareAwards #FilmFare
64-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலா கலமாக நடந்தது. இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் இந்தி முன்னணி நடிகர்-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிறந்த நடிகராக ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ‘சஞ்சு’ படத்தில் நடித்ததற்காக இந்த விருதை வென்றார். அந்த படம் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடித்து இருந்தார்.

சிறந்த நடிகை விருதை ‘ராஷி’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஆலியாபட் வென்றார். இந்த படத்தில் அவர் பெண் உளவாளி வேடத்தில் நடித்து இருந்தார். சிறந்த படமாக ‘ராஷி’யும், அப்படத்தை இயக்கிய மேக்னா குல்சார் சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.



வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. அதை அவரது மகள்கள் பெற்றுக் கொண்டனர். சினிமாவில் 50 ஆண்டு காலம் சேவையாற்றியதற்காக நடிகை ஹேமமாலினிக்கு விருது கொடுக்கப்பட்டது.

‘பத்மாவத்’ படத்தில் நடித்த ரன்வீர்சிங்குக்கு சிறந்த விமர்சிக்கப்பட்ட நடிகர் விருது வழங்கப்பட்டது. இதே போல பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் நடிகர்- நடிகைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Tags:    

Similar News