சினிமா

இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு இரட்டை வேடம்

Published On 2019-03-23 13:19 IST   |   Update On 2019-03-24 11:15:00 IST
முதல் இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KeerthySuresh
கீர்த்தி சுரேஷ், தன் முதல் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது புதிய தகவல். கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பாலிவுட் படமான ‘பதாய் ஹோ’வின் இயக்குநர் அமித் ‌ஷர்மா இயக்கும் இந்த படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் கீர்த்தியின் பாத்திரங்கள் இருவேறு தோற்றங்களில் இருக்கும். மிக இளவயது தோற்றம் ஒன்றிலும், கொஞ்சம் வயதான தோற்றம் ஒன்றிலும் நடிக்கிறார்.

ஆனால், ‘நடிகையர் திலகம்’ படத்துக்காக செய்ததுபோல இந்தப் படத்தில் ப்ராஸ்தெட்டிக் மேக்கப் எதுவும் செய்யவில்லை என்றும் தெரிகிறது. தன் நடிப்பின் மூலமாகவே வயது முதிர்ச்சியை வெளிப்படுத்தலாம் என்று கீர்த்தி முடிவெடுத்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KeerthySuresh

Tags:    

Similar News