சினிமா

மீண்டும் கிரிக்கெட் வீராங்கனையாக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On 2019-03-16 12:38 IST   |   Update On 2019-03-16 18:16:00 IST
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் தெலுங்கு ரீமேக்கிலும் ஐஸ்வர்யா நடிக்க இருக்கிறார். #Kanaa #AishwaryaRajesh
‘காக்கா முட்டை’, `தர்மதுரை' படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கனா’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கும் பாராட்டுக்களும் கிடைத்தது.

அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தியது. இதில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார். கிரிக்கெட் விளையாடி பயிற்சிகள் எடுத்து இதில் நடித்தார்.



இந்த நிலையில் கனா படத்தை தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்திலும் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார்.

இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திலும், சலீம் இயக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார். இது அவருக்கு 3-வது தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. #Kanaa #AishwaryaRajesh #KousalyaKrishnamoorthyCricketer

Tags:    

Similar News