சினிமா

திருநங்கைகளை பிரித்து வைப்பது தவறு - விஜய் சேதுபதி

Published On 2019-03-07 11:59 GMT   |   Update On 2019-03-07 11:59 GMT
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, திருநங்கைகளை பிரித்து வைப்பது தவறு என்று பேட்டியளித்துள்ளார். #VijaySethupathi #SuperDeluxe
நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சீதக்காதியில் வயதான தோற்றத்தில் வந்த அவர் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார்.

சமீபத்திய படங்களில் 96 அவருக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தை பிற மொழிகளிலும் போட்டி போட்டு தயாரிக்கின்றனர்.

அடுத்து சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, மாமனிதன், தெலுங்கு, தமிழில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் வருகிறார். அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.



விஜய் சேதுபதி இந்த தோற்றத்துக்காக மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “படத்தில் ஆணாக இருக்கும் நாம் எளிதாக திருநங்கை கதாபாத்திரத்தை செய்து விடலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அந்த மாதிரி நடிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இந்த சமூகம் இந்த திருநங்கைகளை ஏன் இப்படி பிரித்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் மனிதர்கள்தான். சாதி ஏற்றத்தாழ்வு போல் இதையும் தனித்தனியா பிரித்து வைப்பது தவறு. இது பெரிய அவமானம் ஆகும்” என்றார்.
Tags:    

Similar News