சினிமா

முழு நீள ஆக்‌ஷன் படத்தில் நந்திதா

Published On 2019-03-06 14:51 IST   |   Update On 2019-03-06 14:51:00 IST
ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் உருவாகும் `ஐபிசி 376' படத்தில் போலீசாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா இதன் மூலம் ஆக்‌ஷன் ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கிறார். #IPC376 #NanditaSwetha
நந்திதா ஸ்வேதா தற்போது தேவி 2, நர்மதா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நந்திதாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் நந்திதா ஸ்வேதா முதன்முறையாக ஆக்சன் கதாநாயகியாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.



த்ரில்லர், சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில் முக்கியமானதாக இருக்கும். பிரபு சாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் இயக்கும் இந்த படத்திற்கு `ஐபிசி 376' என்று தலைப்பு வைத்துள்ளனர். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆர்.நிர்மல் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.


பவர் கிங் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.பிரபாகர் தயாரிப்பாளராக அறிமுகமாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. #IPC376 #NanditaSwetha

Similar News