சினிமா

புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0

Published On 2019-03-06 13:05 IST   |   Update On 2019-03-06 13:05:00 IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படம் சில மாற்றங்களுடன் புதிய பெயரில் சீனாவில் வெளியாக இருக்கிறது. #2Point0 #Rajinikanth
இந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. அமீர்கானின் ‘தங்கல்’, ராஜமவுலியின் ‘பாகுபலி’ படங்கள் சீனாவில் அதிக தியேட்டர்களில் ரிலீசாகி வசூலை குவித்தன.

ரஜினிகாந்த் நடிக்க ‌ஷங்கர் இயக்கிய படம் 2.0. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு பிரம்மாண்டமாக உருவான இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வெளியானது. ரஜினியின் படங்களுக்கு ஜப்பானில் வரவேற்பு உள்ளது. அதுபோல் சீனாவிலும் மார்க்கெட் உருவாகி இருக்கிறது. 2.0 படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த படத்துக்கு 2.0 என்று சுருக்கமாக டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் சீனாவில் நீண்ட தலைப்புடன் ரிலீஸ் ஆக இருக்கிறது. பாலிவுட் ரோபோ 2.0 ரிசர்கென்ஸ் (பாலிவுட் ரோபோ 2.0வின் எழுச்சி) என படத்துக்கு புதிதாக பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தில் சீன ரசிகர்களை கவர்வதற்காக மேலும் சில வி.எப்.எக்ஸ் (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) காட்சிகளும் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.



இந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமா உலகில் அறிமுகமாகி இந்தி சினிமா உலகிலும் டாப் ஹீரோயினாக இருந்தார். இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீதேவி ‘மாம்‘ என்ற படத்தில் 2017-ம் ஆண்டு நடித்தார். இந்த படம் ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கையில் 300-வது படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக ஸ்ரீதேவி இறந்தார். அவர் இறந்த பின் 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசியவிருது மாம் படத்திற்காக ஸ்ரீ தேவிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் வெற்றி பெற்ற மாம் திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது. வரும் 22-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். #2Point0 #Rajinikanth #MOM #Sridevi

Similar News