சினிமா

கிரைம் திரில்லர் படங்களை எடுக்க மிஷ்கினுக்கு தடை

Published On 2018-12-24 16:49 GMT   |   Update On 2018-12-24 16:49 GMT
பல வெற்றி படங்களை கொடுத்த மிஷ்கினுக்கு, கிரைம் திரில்லர் படங்களை எடுக்க உயர்நீதி மன்றம் விதித்துள்ளது. #Mysskin #CrimeThriller
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிரைம் திரில்லர் படங்களை எடுக்க மிஷ்கினுக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல தயாரிப்பாளர் ரகுநந்தனின் மகன் ஷாம் என்னும் மைத்ரேயாவை வைத்து இயக்குனர் மிஷ்கின் கிரைம் திரில்லர் படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரகுநந்தனிடம் முன்பணம் பெற்றிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். ஆனால், படம் எடுக்காமல் தள்ளிப்போட்டதாலும், தன்னை வைத்து எடுக்க இருந்த கதையை வேறொரு நடிகரை வைத்து எடுப்பதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரகுநந்தன்.

இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிரைம் திரில்லர் திரைப்படங்கள் எடுக்க இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரகுநந்தன் தரப்பில் கூறப்பட்டுள்ள புகாருக்கு பதிலளிக்க மிஷ்கினுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. 
Tags:    

Similar News