சினிமா

பாலியல் சாமியாருடன் தொடர்பா? - நடிகர் அக்‌ஷய் குமாரிடம் விசாரணை

Published On 2018-11-22 21:10 IST   |   Update On 2018-11-22 21:10:00 IST
பாலியல் சாமியாருடன் தொடர்பு இருப்பதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். #AkshayKumar
தமிழில் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ளார் அக்‌ஷய்குமார். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் வழக்கில் கைதாகி 20 வருட சிறை தண்டனை பெற்றுள்ளார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் சீக்கியர்கள் மத உணர்வை புண்படுத்தும் உடை அணிந்து இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பி வட மாநிலங்களில் போராட்டங்களும் நடந்தன. இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள்.

இதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் சமீபத்தில் பஞ்சாப் சட்டசபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் குர்மீத் ராம் ரகீம் சிங்கையும் அப்போதையை பஞ்சாப் துணை முதல்-மந்திரி சுக்பிர் சிங் பாதலையும் அக்‌ஷய்குமார் தனது வீட்டில் சந்தித்து பேச ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ராம் ரகீம் நடித்த படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.



இதனை பாதல் மறுத்து இருந்தார். இதுகுறித்து அக்‌ஷய்குமாரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்து நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சண்டிகாரில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் அக்‌ஷய்குமார் நேற்று ஆஜரானார். அவரிடம் சாமியாருடன் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
Tags:    

Similar News