சினிமா

சக நடிகைகளிடம் பொறாமை இல்லை - திரிஷா

Published On 2018-10-30 18:19 IST   |   Update On 2018-10-30 18:19:00 IST
96 படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் திரிஷா, சக நடிகைகளிடம் பொறாமை இல்லை என்று கூறியிருக்கிறார். #Trisha #96Movie
96 படம் கொடுத்த வெற்றி திரிஷாவை உற்சாகமாக மாற்றி இருக்கிறது. மீண்டும் அஜித், விஜய், சூர்யா என்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

சக நடிகைகள் மீது பொறாமைப்பட்டதே இல்லை என்று கூறி இருக்கும் திரிஷா தன்னை கவர்ந்த நடிகைகளையும் பட்டியலிட்டு இருக்கிறார். “நான் எந்த நடிகையைப் பார்த்தும் பொறாமைப்பட்டதில்லை.

எல்லாத் துறையிலும் போட்டி இருக்கும்; அதை எல்லாம் நான் பொருட்படுத்திக்கமாட்டேன். ஜோதிகா இப்போதும் ரொம்ப அழகான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அனுஷ்கா, நயன்தாரா என்று ஒவ்வொருத்தரிடமும் இருக்கிற நல்ல வி‌ஷயங்களை நான் ரசிக்கிறேன்.

ஆரோக்கியமான போட்டிதான், நாம செய்யற வேலையை சுவாரசியமாக மாற்றும். சமந்தா, கீர்த்தி சுரேஷ் இரண்டுபேருமே திறமைசாலிகள். சமந்தாவை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படப்பிடிப்பில்தான் முதல்முறையாக பார்த்தேன். அப்போவே அவங்க நடிப்பை ரசிச்சிருக்கேன். கீர்த்தியை ஒரே ஒருமுறைதான் சந்திச்சிருக்கேன். ‘நடிகையர் திலகம்’ படத்துல கலக்கியிருந்தாங்க. அற்புதமான நடிகை” என்று புகழ்ந்துள்ளார்.
Tags:    

Similar News