சினிமா

ரஜினியை தொடர்ந்து கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

Published On 2018-10-10 17:02 IST   |   Update On 2018-10-10 17:02:00 IST
ரஜினிக்கு வில்லனாக நடித்த பிரபல நடிகர், அடுத்ததாக கமல் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். #Rajini #Kamal #Indian2
‌சங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான ‘2.0’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்து சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் சத்தமின்றி நடந்து வருகின்றன.

இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே கமல், சங்கரிடம் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘2.0’ படத்தில் அக்‌‌ஷய் குமார் இருப்பது போல இந்தியிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வந்து வில்லனாக நடிக்க வைக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை சங்கர் ஒப்புக்கொண்டார்.



இதற்காக தொடக்கத்தில் அஜய் தேவ்கன் உட்பட சில நடிகர்களை அணுகி இருக்கிறார்கள். யாருடைய தேதிகளும் ஒத்துவரவில்லை. கடைசியில் அக்‌‌ஷய் குமார் தேதி கிடைக்க அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ரஜினியைத் தொடர்ந்து கமலுக்கும் வில்லனாகி விட்டார் அக்‌‌ஷய். தமிழ் சினிமாவில் இந்தி நடிகர்கள் நடித்தால் அகில இந்திய அளவில் வியாபார முக்கியத்துவம் கிடைக்கும் என்பதால் இந்தி வில்லன்கள் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் இனி அதிகரிக்கலாம்.
Tags:    

Similar News