சினிமா

அனுபமா பரமேஸ்வரனின் பேராசை நிறைவேறுமா?

Published On 2018-10-10 16:34 IST   |   Update On 2018-10-10 16:34:00 IST
மலையாளத்தில் பிரேமம் மற்றும் தமிழில் கொடி படம் மூலம் மிகவும் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் பேராசையுடன் இருக்கிறார். #AnupamaParameswaran
‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர்.

இவருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் படப்பிடிப்பில் பிரச்சினை என்று செய்தி பரவியது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘பிரகாஷ் ராஜுடன் 6 மாதம் படப்பிடிப்பு நடந்தது. பிரகாஷ்ராஜ் எனக்கு ஒரு சின்ன அறிவுரை கூற அதை பெரிதாக்கிவிட்டார்கள்.

எனக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது என்பது போன்று பேசிவிட்டார்கள். அந்த சம்பவம் நடந்த பிறகு கூட நாங்கள் 25 நாட்கள் படப்பிடிப்பில் சேர்ந்து கலந்து கொண்டோம். படத்தில் எத்தனை ஹீரோயின்கள் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பது இல்லை. என் கதாபாத்திரம் என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களை கைப்பற்ற பேராசையுடன் உள்ளேன்.



படங்கள் தோல்வி அடைவது அனைவருக்கும் நடப்பது தான். அனைத்து படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்க முடியாது. தோல்வி அடைந்த படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அதன் பிறகு கதையை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றேன். நான் தற்போது பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் உள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News