சினிமா

என் கலையின் தாகத்தை தீர்த்த 60 வயது மாநிறம் - தாணு

Published On 2018-08-07 11:46 GMT   |   Update On 2018-08-07 11:46 GMT
பல வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி தாணு, என் கலையின் தாகத்தை 60 வயது மாநிறம் திரைப்படம் தீர்த்துள்ளது என்று கூறியிருக்கிறார். #60VayadhuMaaniram
பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் கலைப்புலி தாணு. இவர் தனது வி.கிரியேஷன்ஸ் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது ‘60 வயது மாநிறம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். 

தந்தை மகனுக்குமான இடையேயான உறவை சொல்லும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.



இந்நிலையில், இப்படம் பற்றி தாணு கூறும்போது, ‘கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு, என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக ‘60 வயது மாநிறம்’ அமைய பெற்றுள்ளது. எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது’ என்று கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News