சினிமா

ஆக்‌‌ஷன் ஹீரோவாக களமிறங்கும் மகேஷ்

Published On 2018-08-07 10:54 GMT   |   Update On 2018-08-07 10:54 GMT
அங்காடித்தெரு படம் மூலம் பிரபலமான மகேஷ், தற்போது வீராபுரம் படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். #Magesh #Veerapuram
வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் மகேஷ். அதன்பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அவர் இப்போது பெரிதும் நம்பும் படம் வீராபுரம்.

மணற் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்ட கதை. ஆக்‌‌ஷன் ஹீரோவாக நடிக்கிறார் மகேஷ். அவருக்கு ஜோடியாக உறுதிகொள் மேகனா நடிக்கிறார். செந்தில் குமார் இயக்க குணசேகரன் தயாரிக்கிறார். சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.



இறுதிகட்டத்தில் உள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Tags:    

Similar News