சினிமா

இந்த வாரம் 11 படங்கள் ரிலீஸ்

Published On 2018-07-30 17:26 IST   |   Update On 2018-07-30 17:26:00 IST
கடந்த சில மாதங்களாக ஒரு சில படங்கள் மட்டும் வெளியான நிலையில், இந்த வாரம் 11 படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilMovies
தமிழ் நாட்டில் தியேட்டர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 1000க்கு குறைவான தியேட்டர்களே இருக்கின்றன. ஒரு வாரத்தில் அதிகபட்சம் 3 படங்கள் வெளியானாலே தியேட்டர்கள் கிடைப்பது சிரமமாகி விடும். இந்நிலையில் இந்த வாரம் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன.

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான கடைக்குட்டி சிங்கமும், தமிழ்படம் 2வும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் ரிலீசான விஜய் சேதுபதியின் ஜுங்காவும், திரிஷாவின் மோகினியும் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.



கஜினிகாந்த், மணியார் குடும்பம், காட்டுப்பய சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, அழகுமகன், போயா, அரளி, கடிகார மனிதர்கள், உப்பு புளி காரம், நாடோடி கனவு, கடல் குதிரைகள் என ரிலீஸ் தேதியை அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ள இவை அனைத்துமே சிறுபட்ஜெட் படங்கள். அடுத்த வாரம் கமலின் விஸ்வரூபம் 2 வெளியாக இருப்பதால் இந்த வாரமே ரிலீஸ் செய்ய போட்டி போடுகிறார்கள்.
Tags:    

Similar News