இது புதுசு

விரைவில் இந்தியா வரும் புது லம்போர்கினி கார்

Update: 2022-08-06 11:34 GMT
  • லம்போர்கினி நிறுவனம் புதிய ஹரகேன் டெக்னிகா மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது.
  • இந்த கார் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான லம்போர்கினி இந்திய சந்தையில் புதிய ஹரகேன் டெக்னிகா மாடல் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

வி10 சூப்பர்காரின் புது வேரியண்ட் ஹரகேன் RWD மற்றும் ஹரகேன் STO மாடல்களின் இடையில் நிலை நிறுத்துப்பட இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புது லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த RWD வேரியண்ட் ஆகும்.


 இதில் 5.2 லிட்டர் NA வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 640 ஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும்.

இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. புதிய லம்போர்கினி காரில் 20 இன்ச் அலாய் வீல்கள், ரி-வொர்க் செய்யப்பட்ட விண்டோ லைன், கார்பன் பைபர் என்ஜின் கவர், டிப்யுசர் அடங்கிய புது ரியர் பம்ப்பர், ரியர் ஸ்பாயிலர், ஹெக்சகன் வடிவம் கொண்ட டூயல் எக்சாஸ்ட் பைப்கள் உள்ளன.

Tags:    

Similar News