null
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் வெளியீடு - இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்!
- ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவா பெயரிலேயே விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
- புதிய ஸ்கூட்டர்கள் மாற்றக்கூடிய பேட்டரி செட்டப், அளவில் சிறியதாகவும் குறைந்த எடை கொண்டிருக்கலாம்.
ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் டிவிஎஸ் ஐகியூப், ஏத்தர் 450x மற்றும் ஒலா S1 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.
புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக்டிவா பெயரிலேயே விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று இல்லாமல் புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும்.
இத்துடன் புதிய ஹோண்டா ஸ்கூட்டரில் பாதுகாப்பு காரணங்களுக்காக Fixed பேட்டரி செட்டப் வழங்கப்பட இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. தோற்றத்தில் இந்த ஸ்கூட்டரின் ஸ்டைலிங் ஹோண்டா ஆக்டிவா போன்றே காட்சியளிக்கிறது.
ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பின், ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை முற்றிலும் புதிய born-electric பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படலாம். புதிய ஸ்கூட்டர்கள் மாற்றக்கூடிய பேட்டரி செட்டப், அளவில் சிறியதாகவும் குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.