இது புதுசு
2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ்

அதிரடி மாற்றங்கள், ஏராளமான புது அம்சங்களுடன் 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்

Update: 2022-05-19 10:03 GMT
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்கள் மற்றும் இந்திய வெளியீடு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


பி.எம்.டபிள்யூ. குழுமத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் அப்டேட் செய்யப்பட்டு 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. புதிய 3 சீரிஸ் மாடலில் கூர்மையான டிசைன், மேம்பட்டு இண்டீரியர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் பவர்டிரெயின் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அடுத்த ஆண்டு துவக்கம் அல்லது 2023 ஆண்டு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 2023 பி.எம்.டபிள்.யூ. 3 சீரிஸ் மாடலின் வெளிப்புறம் ஸ்டிரக்ச்சர் செய்யப்பட்ட சர்பேஸ்கள், டைனமிக் லைன் மற்றும் பெரிய ஏர் இண்டேக் உள்ளிட்டவை உள்ளன. இவை காரின் முன்புறத்திற்கு அதிரடியான ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. இதன் ஹெட்லைட் மற்றும் கிட்னி கிரில்கள் ரி-டிசைன் செய்யப்பட்டு உள்ளன. ஸ்டாண்டர்டு எல்.இ.டி. ஹெட்லைட்கள் தற்போது மிக மெல்லியதாக மாற்றப்பட்டுள்ளன. இதன் டேடைம் டிரைவிங் லைட்கள் தலைகீழாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இவை காருக்கு அதிநவீன தோற்றத்தை வழங்குகின்றன.

புதிய 2023 பி.எம்.டபிள்.யூ. 3 சீரிஸ் மாடலில் முந்தைய வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின்களே வழங்கப்பட்டு உள்ளன. இதன் பேஸ் வேரியண்ட் 330i மாடலில் 2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 255 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. 330e பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 3 லிட்டர் I6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 
Tags:    

Similar News