இது புதுசு
ஹூண்டாய்

எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்பு - ஹூண்டாய் மற்றும் டாடா பவர் புது கூட்டணி

Published On 2022-05-18 10:41 GMT   |   Update On 2022-05-18 10:41 GMT
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஹூண்டாய் மற்றும் டாடா பவர் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து உள்ளன.


ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் டாடா பவர் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து உள்ளன. கூட்டணியின் படி இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, நாடு முழுக்க ஹூண்டாய் விற்பனை மையங்களில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க்-ஐ கட்டமைக்க முடிவு செய்துள்ளன. 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான அன்சு கிம், டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் பிரவீர் சின்ஹா இடையே புது கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 



பின் இருவரும் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். கூட்டணி பற்றிய அறிவிப்பு ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள ஹூண்டாய் இந்தியா தலைமையகத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது 29 நகரங்களில் 32 எலெக்ட்ரிக் வாகன டீலர்களை வைத்து இருக்கிறது. 

ஹூண்டாய் இந்தியா எலெக்ட்ரிக் வாகன டீலர்ஷிப்களில் தற்போது 7.2 கிலோவாட் AC சார்ஜர்களே உள்ளன. புது ஒப்பந்தத்தின் படி டீலர்ஷிப்களில் உள்ள சார்ஜர்களை 60 கிலோவாட் DC பாஸ்ட் சார்ஜர்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது டீலர்ஷிப்களில், இடவசதி மற்றும் அனைத்து விதமான ஒப்புதல்களை டாடா பவர் நிறுவனத்திற்கு வழங்கும். இங்கு சார்ஜிங் மையங்களை நிறுவி அவற்றை பராமரிக்கும் பணிகளை டாடா பவர் மேற்கொள்ள இருக்கிறது. 
Tags:    

Similar News