இது புதுசு
டொயோட்டா இன்னோவா

பெட்ரோல் ஹைப்ரிட் வடிவில் விரைவில் இந்தியா வரும் புதிய டொயோட்டா இன்னோவா

Published On 2022-05-17 10:43 GMT   |   Update On 2022-05-17 10:43 GMT
டொயோட்டா நிறுவனம் உருவாக்கி புதிய இன்னோவா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


டொயோட்டா நிறுவனத்தின் பிரபல எம்.பி.வி. மாடலாக இன்னோவா இருக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் டொயோட்டா இன்னோவா விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், டொயோட்டா இன்னோவா மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகி வரும் இன்னோவா கார் அடுத்த தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய டொயோட்டா இன்னோவா மாடல் இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டம் அதாவது அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 



புதிய டொயோட்டா இன்னோவா மாடல் மோனோக் சேசிஸ் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடலில் டீசல் என்ஜினுக்கு மாற்றாக பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் புதிய டொயோட்டா இன்னோவா மாடலில் அதிக மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. இதோடு புதிய இன்னோவா மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா மாடல் 4.7 மீட்டர் நீளமாக இருக்கும் என தெரிகிறது. இது இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட அளவில் சிறியது ஆகும். அளவில் சிறியதாக இருந்தாலும் புதிய மாடல் அதிக இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய இன்னோவா மாடல் வீல்பேஸ் 2850 மில்லிமீட்டர் அளவிலும், வீல்களுக்கு இடையில் அதிக இடைவெளி உள்ளது. இதனால் காரின் உள்புறத்தில் அதிக இடவசதி கிடைக்கும். 
Tags:    

Similar News