இது புதுசு
கியா EV6

பிரிமீயம் எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக பெருமளவு அம்சங்களுடன் களமிறங்கும் கியா EV6

Update: 2022-05-16 09:41 GMT
கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் EV6 எலெக்ட்ரிக் கார் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா, தனது இந்திய வெளியீட்டை ஒத்திவைத்து இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் அதிகளவு இறக்குமதி வரி காரணமாக டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கும முடிவை ஒத்தி வைப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இதனிடையே கியா இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஹூண்டாய் நிறுவனம் தனது EGMP EV பிளாட்பார்மை இந்தியா கொண்டு வருகிறது. இந்த பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் கியா EV6 மாடலும் இதே பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தின் EGMP EV பிளாட்பார்ம் கொண்டு உருவாக்கப்பட்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கார் மாடல் என்ற பெருமையை கியா EV6 பெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

புதிய கியா EV6 காரின் ஏர் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் கான்பிகரேஷன் கொண்டிருக்கிறது. கியா EV6 GT லைன் மாடலில் ஏராளமான அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பில்ட் இன் டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ABS, BAS, ESC, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹைவே டிரைவிங் அசிஸ்ட் மற்றும் வெஹிகில் ஸ்டேபிலிட்டி மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News