இது புதுசு
பி.எம்.டபிள்யூ. X1

பனிப் படர்ந்த சூழலில் டெஸ்டிங் செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. X1 - வெளியான புது டீசர்

Update: 2022-05-12 10:46 GMT
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது புதிய X1 மாடலுக்கான புது டீசரை வெளியிட்டு உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


பி.எம்.டபிள்யூ. தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில், பி.எம்.டபிள்யூ. அறிமுகம் செய்ய இருக்கும் புது மாடல் X1 EV ஆகும். புதிய எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் டீசர் முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆர்ஜ்ப்ளாக் ஆலை அருகில் சோதனை செய்யப்படுகிறது.

புதிய எலெக்ட்ரிக் மாடல்களை போன்றே பி.எம்.டபிள்யூ. iX1 மாடலும் ஐந்தாம் தலைமுறை இடிரைவ் பவர்டிரெயினில் உருவாக்கப்படுகிறது. இதில் டூயல் மோட்டார் செட்டப் மற்றும் AWD சிஸ்டம், அதிக வோல்டேஜ் பேட்டரி பேக் வழங்கப்பட இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 413 முதல் 438 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.  பி.எம்.டபிள்.யூ. iX1 மாடலின் இதர தொழில்நுட்ப விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. எனினும், இவை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கலாம். புதிய X1 மாடலின் பிளக் இன் ஹைப்ரிட் வெர்ஷன்களும் வழங்கப்படுகிறது. இவை அதன் சர்வதேச வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

புது பி.எம்.டபிள்.யூ. மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவற்றின் இந்திய வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News