இது புதுசு
போக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் வாகனம்

மூன்று நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் அசத்தலான எலெக்ட்ரிக் கார் - வெளியீட்டு விவரம்

Update: 2022-05-10 10:46 GMT
போக்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் குப்ரா நிறுவனங்கள் கூட்டணியில் புதிதாக காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.

போக்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் சியட் நிறுவனத்தின் குப்ரா பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்பட இருக்கும் காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளை போக்ஸ்வேகன் குழுமம் துவங்கி இருக்கிறது. மூன்று மாடல்களும் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB EV பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட இருக்கின்றன. இவற்றில் ஒரே மாதிரியான அடையாளங்கள் இடம்பெற்று இருக்கும்.

புதிய கார்கள் பொதுவாக MEB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு, போக்ஸ்வேகன் ID.3 மற்றும் ID.4 மாடல்களை சார்ந்து உருவாக்கப்பட இருக்கிறது. இவை ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படு வரும் போஸ்க்வேகன் e-UP, ஸ்கோடா சிட்டிகோ e-IV மற்றும் சியட் Miii எலெக்ட்ரிக் அர்பன் EV மாடல்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் அர்பன் EV மாடல்கள் ஸ்பெயின் நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த பகுதியில் புதிய பேட்டரி ஆலையை கட்டமைக்க போக்ஸ்வேகன் குழுமம் இந்திய மதிப்பில் ரூ. 81 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பேட்டரிகள் மர்டோரெல் மற்றும் பம்ப்லோனா வாகன உற்பத்தி மையங்களுக்கு அனுப்பப்பட இருக்கின்றன.

2030 ஆண்டு வாக்கில் போக்ஸ்வேகன் உருவாக்க இருக்கும் ஆறு பேட்டரி உற்பத்தி ஆலைகளில் இது மூன்றாவது ஆலையாக இருக்கும். இரு பேட்டரி உற்பத்தி ஆலைகள் ஜெர்மனி மற்றும் ஸ்வீடனில் உருவாகி வருகின்றன. இவை தவிர செக் குடியரசு, ஸ்லோவேகியா, போலாந்து மற்றும் ஹங்கேரி போன்ற பகுதிகளிலும் போக்ஸ்வேகன் பேட்டரி உற்பத்தி ஆலைகள் துவங்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News