இது புதுசு
ஹோண்டா ஹைனெஸ்

ஐ.ஓ.எஸ். கனெக்டிவிட்டியுடன் புது ஹோண்டா பைக் இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-05-09 11:01 GMT
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹைனெஸ் மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஹைனெஸ் CB350 மோட்டார்சைக்கிள் மாடலுக்கு ஐ.ஓ.எஸ். இண்டகிரேஷன் வசதியை வழங்கி இருக்கிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளில் ஆண்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு அழைப்புகள், மெசேஜ் மற்றும் நேவிகேஷன் போன்ற விவரங்களை காண்பிக்கும். 

எனினும், இந்த அம்சம் முதற்கட்டமாக ஹோண்டா ஹைனெஸ் டாப் எண்ட் மாடலான DLX ப்ரோ மற்றும் ஆனிவர்சரி எடிஷன் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 03 ஆயிரத்து 179 என்றும் ரூ. 2 லட்சத்து 05 ஆயிரத்து 679 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.புதிய ஐ.ஓ.எஸ். வசதி தவிர, இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சைடு ஸ்டாண்டு மற்றும் என்ஜின் கட்-ஆப், டூயல் சேனல் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாடலில் 348.3சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 21 பி.ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News