இது புதுசு
டாடா ஏஸ் EV

154 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் டாடா ஏஸ் EV மாடல் அறிமுகம் - டாடா மோட்டார்ஸ் அதிரடி

Published On 2022-05-06 10:06 GMT   |   Update On 2022-05-06 10:06 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் யாரும் எதிர்பாராத நிலையில், புதிய டாடா ஏஸ் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாடா ஏஸ் மாடலை அதிரடியாக அப்டேட் செய்து இருக்கிறது. இந்தியாவில் 17 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஏஸ் மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிறிய ரக வர்த்தக வாகனமாக விற்பனை செய்யப்படும் டாடா ஏஸ் மாடல் தற்போது எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

இதுவரை டாடா ஏஸ் மாடல் பெட்ரோல், டீசல் மற்றும் CNG என மூன்று வித வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்த நிலையில், தற்போது இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டாடா ஏஸ் தற்போது அனைத்து விதமான எரிபொருள்களிலும் இயங்கும் மாடல் என்ற பெருமையை இருக்கிறது. 



இந்தியாவில் தற்போதைய டாடா ஏஸ் மாடல்களின் விலை ரூ. 4 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக புதிய டாடா ஏஸ் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 

டாடா ஏஸ் EV மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் EVOGEN பவர்டிரெயினில் இயங்குகிறது. இந்த பவர்டிரெயினில் கிடைக்கும் முதல் வாகனம் இது ஆகும். இந்த வாகனம் முழு சார்ஜ் செய்தால் 154 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதில் 21.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 36 ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டாடா ஏஸ் EV மாடலில் பேட்டரி கூலிங் சிஸ்டம் மற்றும் ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வாகனத்தின் டிரைவிங் ரேன்ஜ்-ஐ அதிகப்படுத்தும்.  
Tags:    

Similar News