இது புதுசு
ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன்

ரூ. 13 லட்சம் விலையில் புதிய கிரெட்டா நைட் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-05-04 10:57 GMT
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிரெட்டா நைட் எடிஷன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா நைட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

மாற்றங்களை பொருத்தவரை கிரெட்டா நைட் எடிஷனின் வெளிப்புறம் டி-குரோம் செய்யப்பட்ட முன்புற கிரில், முன்புறம் - பின்புறம் ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில்கள், சி பில்லர் மற்றும் ORVM-களில் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் கொண்டுள்ளது. இதன் பின்புற டெயில் கேட் பகுதியில் நைட் எடிஷன் லோகோ இடம்பெற்று இருக்கிறது.வீல்களை பொருத்தவரை புதிய பேஸ் மாடலான கிரெட்டா S+ வேரியண்ட்-இல் 16 இன்ச் டார்க் கிரே நிற அலாய் வீல்களும், டாப் எண்ட் SX (O) வேரியண்டில் 17 இன்ச் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுஉள்ளன. இதன் முன்புற டிஸ்க் பிரேக் கேலிப்பர்கள் சிவப்பு நிறம் கொண்டுள்ளன. கேபின் முழுக்க ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு, லெதர் இருக்கைகள், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இது பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.

ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் SX (O) வேரியண்டில் மட்டும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News