இது புதுசு
டாடா நெக்சான் இ.வி.

பெரிய பேட்டரியுடன் அப்டேட் ஆகும் நெக்சான் இ.வி.

Published On 2021-12-28 08:17 GMT   |   Update On 2021-12-28 08:17 GMT
ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்ட பேட்டரியுடன் நெக்சான் இ.வி. அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


டாடா நெக்சான் இ.வி. மாடல் விரைவில் 40 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வேரியண்ட் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலுடன் சேர்த்து விற்பனையாகும். 

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக நெக்சான் இ.வி. இருக்கிறது. இந்திய சந்தையில் நெக்சான் இ.வி. மாடல் 70 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. தற்போதைய நெக்சான் இ.வி. மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3 பேஸ் மேகனட் சின்க்ரோனஸ் மோட்டார் உள்ளது. 



இவை இந்த காருக்கு 127.23 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்லும். புதிய பேட்டரி பேக் நெக்சான் இ.வி. மாடலை முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்கும். கூடுதல் ரேன்ஜ் மட்டுமின்றி காரில் 100 கிலோ எடையை கூடுதலாக எடுத்து செல்ல முடியும்.
Tags:    

Similar News